Poo Mudikkanum |
---|
பூ முடிக்கனும் உன் தலையிலே
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
இன்பம் சேரும் உந்தன் அழகிலே
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே
நான் இருக்கணும் உன் அணைப்பிலே
பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே
பச்சை மர வாழைத் தோரணம்
பந்தல் எல்லாம் நமக்கு போடணும் ம்ம்ம்ம்
பூ முடிக்கனும் உன் தலையிலே
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
அன்னம் போலே நடக்கிற
சித்திரம் போலே சிரிக்கிற
கட்டழகாய் நீ இருக்கிற
முக்கனியாய் நீ இனிக்கிற
கொட்டு மேளம் கொட்டனும்
நீ கழுத்தில் தாலி கட்டனும்
விடிய விடிய பேசனும்
விளக்கில் எண்ணை தீரணும்
இருவர் : ம்ம்ம்ம்ம் ஒஹ்ஹொஹ்ஹஒஹ்
பூ முடிக்கனும் உன் தலையிலே
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
ஊரை கொஞ்சம் மறக்கனும்
உறவை நானும் பார்க்கனும்
கண்ணா என்று அணைக்கனும்
காதல் கீதம் நான் பாடனும்
கட்டிலிலே தொடங்கனும்
தொட்டிலிலே முடிக்கனும்
கட்டிலிலே தொடங்கனும்
தொட்டிலிலே முடிக்கனும்
ஆசை எல்லாம் தீரணும்
நான் ஆராரோ பாடனும்
ஆரிராரோஆரிராரோ
பூ முடிக்கனும் உன் தலையிலே
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
இருவர் : லலல் லலல் லலல்ல லல்ல ஆஹா
லலல் லலல் லலல்ல லல்ல
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்