Poomarathu Nizhalumundu |
|---|
பூமரத்து நிழலும் உண்டு
பொன்னி நதி பாட்டுமுண்டு
காவலுக்கு அன்னையுண்டு
ஆராரோஆராரோ
அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்
யார் யாரோஓஒ
பூமரத்து நிழலும் உண்டு
பொன்னி நதி பாட்டுமுண்டு
காவலுக்கு அன்னையுண்டு
ஆராரோஆராரோ
அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்
யார் யாரோஓஒ
தங்கமணித் தொட்டிலுண்டு
தனி வயிரப் பந்தலுண்டு
கண் நிறைந்த மஞ்சம் உண்டு
தாலேலோ தாலேலோ
நாம் கடவுளுக்கு
நன்றி சொல்வோம் தாலேலோ
காக்கை குருவிகள்
உன் தோழர்கள் கண்ணே
காற்றும் மழையும்
உந்தன் சேவகர் கண்ணே
வானம் கூரையென அமைந்தது கண்ணே
வானம் கூரையென அமைந்தது கண்ணே
வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே
வருவார் வரும் வரைக்கும் காத்திரு கண்ணே
பூமரத்து நிழலும் உண்டு
பொன்னி நதி பாட்டுமுண்டு
காவலுக்கு அன்னையுண்டு
ஆராரோஆராரோ
அந்தக் கடவுளுக்கு வேண்டியவர்
யார் யாரோஓஒ
ஆடை அணிமணிகள்
ஆயிரம் கோடி
ஆடிடும் நந்தவனம்
வரும் உன்னைத் தேடி
ஆடை அணிமணிகள்
ஆயிரம் கோடி
ஆடிடும் நந்தவனம்
வரும் உன்னைத் தேடி
சூடும் மலர்கள் உனை
வாழ்த்திடும் பாடி
சூடும் மலர்கள் உனை
வாழ்த்திடும் பாடி
துயில் கொள் சிறுகிளியே இமைகளை மூடி
தங்கமணித் தொட்டிலுண்டு
தனி வயிரப் பந்தலுண்டு
கண் நிறைந்த மஞ்சம் உண்டு
தாலேலோ தாலேலோ
நாம் கடவுளுக்கு
நன்றி சொல்வோம் தாலேலோ
தாயும் மகனும் இங்கே
தனித்திருப்போமே
தலைவன் வரவை எண்ணித்
தவம் புரிவோமே
தாயும் மகனும் இங்கே
தனித்திருப்போமே
தலைவன் வரவை எண்ணித்
தவம் புரிவோமே
மாயக்கலை பயிலப்
பள்ளி செல் கண்ணே
மாயக்கலை பயிலப்
பள்ளி செல் கண்ணே
மங்கல சாத்திரங்கள்
அறிந்துக் கொள் முன்னே
பெண்கள் : நாளை வரும் உலகினிலே
நான்கு வகைப் பருவங்களும்
மாறி வரும் கண்மணியே
ஆராரோ ஆராரோ
இதில் வாழும்வகை
காண்பவர்கள் யார் யாரோ
