Poombaaraiyil

Poombaaraiyil Song Lyrics In English


பூம்பாறையில்
பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான்
சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா
இவ நின்னிருந்தா சாமி
இப்போ ரெண்டும் கெட்டு போனா
இதுக்கென்ன வழி காமி
தன்னந்தனி ஆளா
இவ நின்னிருந்தா சாமி
இப்போ ரெண்டும் கெட்டு போனா
இதுக்கென்ன வழி காமி

பூம்பாறையில்
பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான்
சேர்ந்ததொரு ஆண் குருவி

தன்னாலே பெண் ஒருத்தி
தாயாக ஆன கதை
உண்டாக்கி வைத்தவனே
ஓர் நாளும் அறிந்ததில்லை

கண்ணான காதலியை
கண்ணில் வைத்து பாடுகிறான்
கல்யாண ஊஞ்சலிலே
கற்பனையில் ஆடுகிறான்

யாராலும் விடை கொடுக்க
ஆகாத விடுகதையை
ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீதானே
என்னாகும் நாளை என்று ஏன் மறைத்தாய்

பூம்பாறையில்
பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான்
சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா
இவ நின்னிருந்தா சாமி
இப்போ ரெண்டும் கெட்டு போனா
இதுக்கென்ன வழி காமி

பூம்பாறையில்
பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான்
சேர்ந்ததொரு ஆண் குருவி


அந்நாளில் போட்ட விதை
இந்நாளில் வளருதிங்கே
அன்பான காதல் கதை
அன்றாடம் தொடருதங்கே

உல்லாச ராகத்திலே
பாடுதொரு சோடிக் குயில்
சொல்லாமல் மௌனத்திலே
வாடுதொரு ஊமைக் குயில்

வாய்ப் பூட்டு போட்டுகிட்டா
வந்ததை ஏத்துகிட்டா
பாய் போட்டு தனை இழந்த பூந்தோகை
தன்னாலே வந்த வினைதான் சுமந்தாள்

பூம்பாறையில்
பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான்
சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா
இவ நின்னிருந்தா சாமி
இப்போ ரெண்டும் கெட்டு போனா
இதுக்கென்ன வழி காமி
தன்னந்தனி ஆளா
இவ நின்னிருந்தா சாமி
இப்போ ரெண்டும் கெட்டு போனா
இதுக்கென்ன வழி காமி

பூம்பாறையில்
பொட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான்
சேர்ந்ததொரு ஆண் குருவி