Poonthearil Yeri |
---|
அம்மா அருள் கொடுத்திட
குடியிருப்பது
சிந்தலக் கரையே
அம்மா உனை நினைத்திட
தினம் துதித்திட
இனி இல்லை குறையே
குலம் விளங்க நலம் விளங்க
வரும் தேவி நீ
பெயர் விளங்க புகழ் விளங்கும்
பெரும் ஜோதி நீ
இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
தீயோரின் பாதைக்கொரு வேலி வேலி
நல்லோரை காத்திருக்கும் சூலி சூலி
பரமேஸ்வரி புவனேஸ்வரி ஜெகதீஸ்வரி
தாயேஸ்வரி மாயேஸ்வரி எமை ஆதரி
இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
இருவர் : மன்னவன் உயிரும் சின்னவன் உயிரும்
காத்து நிற்கும் காரணி
ஓம் ஓம்
இருவர் : அன்றும் இன்றும் என்றும் எமக்கு
அன்னம் கொடுக்கும் பூரணி
ஓம் ஓம்
இருவர் : சூரியன் வந்து சந்திரன் வந்து
சுற்றித் திரிவது யாராலே
காரிருள் போல மேகம் திரண்டு
மாரியும் வந்தது யாராலே
உண்மை உணர்ந்திட புத்தியை நீ கொடு
உன்னை வணங்கிட பக்தியை நீ கொடு
அந்தரி சுந்தரி சௌந்தரியே
இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே
முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே
ஓஓஓஓ
மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே
முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே
எக்காலும் வாழும் முக்காலம் போற்றும்
வெக்காளியம்மன் அல்லவா
எக்காலும் வாழும் முக்காலம் போற்றும்
வெக்காளியம்மன் அல்லவா
இருவர் : குங்குமமே தந்திடுவோம்
மங்கலமே பொங்கிட வா
குங்குமமே தந்திடுவோம்
மங்கலமே பொங்கிட வா
இருவர் : பாரடி பாரடி பைரவியே பைரவியே
பைரவி பைரவி பைரவியே
இருவர் : துயர் தீரடி தீரடி அம்பிகையே
அம்பிகை அம்பிகை அம்பிகையே
இருவர் : கூறடி கூறடி அருள் மொழியே
அருள் மொழியே
நான்முக நாயகி நாயகியே
இருவர் : எமக்காரடி ஆரடி வழித்
துணையே வழித் துணையே
தீந்தமிழ் பாடிடும் உமையவளே
இருவர் : வஞ்சகரின் நெஞ்சமெல்லாம் நஞ்சிருக்கும் மஞ்சமம்மா
பிஞ்சு மனம் அஞ்சுதம்மா உன்னிடமே தஞ்சமம்மா
நாயகி நர்த்தகி நாலடி வான்மறை வாசகியே
சந்ததி சாமளை சத்திய சாதரி சாம்பவியே