Poonthenil Kalanthu Male

Poonthenil Kalanthu Male Song Lyrics In English


பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

ஏறாத ஏணிதனில்
ஏறி நடப்பாள்
நல்ல நேரம் வரும்

என்றென்றும் நல்ல புகழ்
தன்னை வளர்ப்பாள்
அந்தக் காலம் வரும்

அவள் ஆரம்ப நிலையிலும்
மீனாக ஜொலிப்பாள்
கலை வண்ணத் தாரகை என வருவாள்

அது நடக்கும்
என நினைக்கும்
மனம் நாள் பார்த்துத்
தொடங்கிவிடும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

கட்டான மேனி உண்டு
ஆடல் நடத்த
வண்ணத் தோகையவள்

சங்கீத ஞானமுண்டு
பாடல் நடத்த
வானம் பாடியவள்


அவள் பூவிழிச் சிரிப்பினில்
பூலோகம் மயங்கும்
பொல்லாதப் புன்னகை கலங்க வைக்கும்

நல்ல புகழும்
பெரும் பொருளும்
அவள் அடைகின்ற காலம் வரும்

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன

என்னைத் தன் நாதன் என்று
சொல்லி மகிழ்வாள்
அதில் தயக்கமில்லை

எப்போதும் என் மடியில்
துள்ளி விழுவாள்
மறு விளக்கமில்லை

அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ் தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை

இதில் எனக்கும்
ஒரு மயக்கம்
இது எந்நாளும் குறைவதில்லை

பூந்தேனில் கலந்து
பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன
தள்ளாடி நடப்பதென்ன
ஆஹா ஹா ஹஹஹா ஆஆ