Poradu Da |
---|
வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா
வட்ட வட்ட வானம்
நாம கையோடு
கிட்ட தட்ட வெற்றி
நம்ம கண்ணோடு
எட்ட எட்ட எழுந்து
நில்லு திமிரோடு
மூச்சு முட்ட முயற்சி
உண்டு நம்மோடு
யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா
வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா
தோல்வி உன்ன செதுக்கும்
ஊரே உன்ன ஒதுக்கும்
காயம் எல்லாம் பதக்கம்
நீயும் கலங்காதே எதுக்கும்
இங்க வேடிக்கை
வேடிக்கை பார்ப்பவனோ
வெறும் பேச்சு பேசி
வாய் வளர்ப்பான்
இங்க வெற்றி பார்வை
பார்ப்பவனோ
தனக்குள்ளேயே தீ வளர்ப்பான்
அட எதுக்கு எதுக்கு
இந்த சோகம்
இன்னும் இருக்கு இருக்கும்
உள்ள வேகம்
அடங்காது பாரு உன் தாகம்
ஒரு மகுடம் உனதாகும்
யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா
வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா
இன்னும் என்ன பயமா
மோதி பாரு சுயமா
தோல்வி இன்றி சுகமா
அட வெற்றி மட்டும் வருமா
நெஞ்ச கீறி கீறி
அதனுள்ளே
விதை போடு போடு உனக்குள்ளே
மரமாக அதுவும்
தான் மாறும்
இந்த உலகம் கை சேரும்
இனி என்ன என்ன
மன ஏக்கம்
விழுந்தாலும் என்ன
அவமானம்
வெற்றி கோட்டுக்கிள்ள
ரொம்ப தூரம்
இனி வானம் அடி வாரம்
யாரால முடியாதுடா
காற்றுக்கு தடை ஏதுடா
ஆட்டத்தில் விழுந்தாலுமே
அவமானம் கிடையாதுடா
வாடா நீயும் போராடுடா
முன்னே நின்னு விளையாடுடா
வெற்றி கோட்ட நீ போடுடா
போடா இன்னும் போராடுடா