Puthagam Eduthu

Puthagam Eduthu Song Lyrics In English


ஓம் கௌசல்யா சுப்ரஜா
ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு

அட காலேஜ் கூண்டுக்குள்
நொந்துபோனோம்
அட அப்போதும் இப்போதும்
வெந்து போனோம்
ஒரு ப்ரீடம் இங்க இருக்கு

புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு

காலேஜு கேம்பஸ்க்குள்ளே
ஒரு டீனேஜ பாத்தது இல்லை
ஒரு டீனேஜ பாத்து நமக்கு
நல்ல நாலேஜ் வந்தது இல்லை

அட ஏறாத ஏழுமலை
ஏறி வந்த வேளையிலும்
எப்போதும் புத்தி மட்டும்
மாறவேயில்லை

வாடாத வாழை இலை
வந்திருக்கும் வேளையிலே
வேறேதும் மூளையிலே
ஏறவே இல்லை

படிச்சோம் படிச்சோம்
அது என்னாச்சு

பருவம் மலர்ந்த
ஒரு பொண்ணாச்சு
இது போதும் இப்ப நமக்கு

புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு

அட காலேஜ் கூண்டுக்குள்
நொந்துபோனோம்
அட அப்போதும் இப்போதும்
வெந்து போனோம்
ஒரு ப்ரீடம் இங்க இருக்கு

உத்திஷ்டோத்திஷ்ட
கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு


பூலோகம் சுத்தி வருது
அத பாத்தாலே புத்தி வருது
ஆளான டக்கர் பிகரு
அத ஆண் வர்க்கம் சுத்தி வருது

பாக்காத சிட்டு இல்லை
பாடாத மெட்டு இல்லை
பாவாடை தாவணிய
தொட்டதே இல்லை

போடாத கொக்கி இல்லை
போட்டிழுக்க சக்தியில்லை
ஆனாலும் ஒண்ணுக்கூட
சிக்கவேயில்லை

நெனச்சு நெனச்சு உடல் நூலாச்சு
படிப்ப நெனச்சு பல நாளாச்சு
அட போடு சக்கைப்போடு

புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு

சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு

அட காலேஜ் கூண்டுக்குள்
நொந்துபோனோம்

அட அப்போதும் இப்போதும்
வெந்து போனோம்

இருவர் : ஒரு ப்ரீடம் இங்க இருக்கு

புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு