Puthagaththai Mella

Puthagaththai Mella Song Lyrics In English


புத்தகத்தை மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு

இந்த புத்தகத்தை
மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு

முன்னும் பின்னும் ரெண்டு பக்கம்
அச்சடிச்சு வெச்சிருக்கும் நல்ல
பள்ளியறை சம்பவங்கள்
வாலிபத்தின் சங்கதிகள்

புத்தகத்தை மெல்லப் புரட்டு
ஆஅஆஅஆஆஆஆஆ

அலங்கார ஆடை கொண்டு
அதற்கேற்ற ஜாடை கொண்டு
இவள் ஒரு தனிமையில்
இரவிலே வாட
அழகான கன்னம் ரெண்டு
அடையாளச் சின்னம் ஒன்று
வாங்கிட வழங்கிட
ஒருவனைத் தேட

நல்ல உறவு உன்னுருவில்
என்னருகில் வந்த பொழுது
சின்ன இடையில் கட்டிலறை
மெட்டுகளை தொட்டு எழுது

புது மேனி நோகாமல்
புண்ணாக ஆகாமல்
எண்ணுகின்ற எண்ணங்களை
கண்டறிய பேச விடு
வந்திருக்கும் மன்மதனே
என்னுடைய மன்னவனே

புத்தகத்தை மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு


வளையோசை கேட்டால் என்ன
விழி ஜாடை பார்த்தால் என்ன
மயங்குமோ கலங்குமோ
என் மனம் தானே
ஒரு போதும் ஆசையில்லை
உதவாது காதல் தொல்லை
உலகிலே இது வரை
தனி மரம் நானே

கன்னி அழகு தத்தி வர
தத்தி வர கண்டு ரசிப்பேன்
கண்ட வரையில் போதுமென
போதுமென எட்டியிருப்பேன்

சுகமான சங்கீதம்
கேட்டாலே சந்தோசம்
இந்த மனம் உன்னுடைய
சொந்த மனம் இல்லையடி
கொஞ்சுவதை கெஞ்சுவதை
மெல்ல மெல்ல விட்டு விடு

புத்தகத்தில் என்ன இருக்கு
ஒரு தத்துவமும் இல்லை எனக்கு
புத்தகத்தில் என்ன இருக்கு
ஒரு தத்துவமும் இல்லை எனக்கு

கண்ணில் ஒரு மோகமில்லை
நெஞ்சில் ஒரு தாகமில்லை
கட்டழகை தொட்டதில்லை
காதல் என்னைச் சுட்டதில்லை

புத்தகத்தில் என்ன இருக்கு
ஆஆஆஆஆஆஆ