Radhai Manathil

Radhai Manathil Song Lyrics In English


ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில் கோதை
ராதை நடந்தால்

மூங்கில் காட்டில்
ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்

பெண் பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும் பாவை
மறந்து தொலைந்தாள்

பெண் நெஞ்சை மூடிக்
கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்

நெஞ்சின் ஓசை
ஒடுங்கிவிட்டால் நிழலை
கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து
மயங்கிவிட்டாள்

தான் இருக்கின்ற
இடத்தினில் இருதயம்
காணவில்லை எங்கே
எங்கே சொல் சொல்

கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா
வா கண்டுபிடிக்க

பெண் ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க



கண்ணன் ஊதும்
குழல் காற்றில் தூங்கிவிட்டு
காந்தம் போல இழுக்கும்

மங்கை வந்தவுடன்
மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்

காடு இருண்டு விட
கண்கள் சிவந்து விட காதல்
ராதை அலைந்தால்

அவனை தேடி அவள்
கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தால்


உதடு துடிக்கும் பேச்சு
இல்லை உயிரும் இருக்கு
மூச்சு இல்லை வந்த பாதை
நினைவு இல்லை போகும்
பாதை புரியவில்லை

உன் புல்லாங்குழல்
சத்தம் வந்தால் பேதை ராதை
ஜீவன் கொள்வாள் கண்ணா
இங்கே வா வா

கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க

ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க

பெண்

கன்னம் தீண்டியதும்
கண்ணன் என்று அந்த கன்னி
கண்கள் விழித்தாள்

கன்னம் தீண்டியது
கண்ணன் அல்ல வெறும்
காற்று என்று திகைத்தாள்

கண்கள் மூடிக்கொண்டு
கண்ணன் பேரை சொல்லி
கைகள் நீட்டி அழைத்தாள்

காட்டில் தொலைத்துவிட்ட
கண்ணின் நீர் துளியை இங்கு
கண்டு பிடித்தாள்

விழியின் சிறகை
வாங்கிக்கொண்டு கிழக்கு
நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை
வாங்கிக்கொண்டு கூவி
கூவி அவள் அழைத்தாள்

அவள் குறை உயிர்
கரையும்முன் உடல் மண்ணில்
சரியும்முன் கண்ணா கண்ணா
நீ வா

கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க

பெண்