Rasave Rasave Kathirunthen

Rasave Rasave Kathirunthen Song Lyrics In English


ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த

தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே

பல நாளா உன்னத் தேடி பசியாற மறந்தேன்யா கடுதாசி வருமோன்னு கண்ணுறங்க மறுக்குதய்யா மனசுக்குள்ள நீயிருந்து மணிக் கணக்கா துடிக்கிறியே மத்தவங்க பார்வைக்குத்தான் மனக் கணக்கா இருக்குறியே

தரையிலே விரிச்ச பாய மடிச்சு வைக்க மனசில்லையே தலையிலே வச்சேன் மல்லி இருந்தும் அது சுகமில்லையே ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே

முகூர்த்தம் வச்சுத்தானே மணம் முடிச்சோம் ஒரு நாளு முதலிரவு முடியும் முன்னே ஏன் நீரு போனீரு கடமை அழைக்குதின்னு நீ பறந்து போனாயோ உன் உடம்பு நிக்குதிங்கே அத மறந்து போனாயே


நெத்தியிலே வச்சப் பொட்டு நெஞ்சுக்குள்ளே நிக்குதய்யா நீ மத்தியிலே தந்த முத்தம் மனசுக்குள்ள நிக்குதய்யா ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே

வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே

ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே