Raththiri Raththiri

Raththiri Raththiri Song Lyrics In English


ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
காலையில் காலையில்
அது தூங்குது தூங்குது

வெண்ணிலாவோ
பெண்ணிலாவோ
ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ

ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது

லாலா லாலாலோ
லாலா லாலா
லாலா லாலாலோ
லாலா லாலா

வானம் என்னும்
ராஜ வீதியில்
தேவலோக வெள்ளை யானை
பவனி வந்தது
உன்னை என்னை
தாங்கி வந்தது
ஊர்வலத்தில் தேவர் கூட்டம்
வானம் விட்டது

என்ன என்னவோ
வர்ண ஜாலங்கள்
மெல்லிசைகளின்
மேள தாளங்கள்
ராஜ ராஜனின்
ராணியல்லவா
பூஜை செய்கிற
மேனியல்லவா

ஆதி அந்தம் அற்புதம்
அழகு என்னும் சித்திரம்
ஆடவா கூடவா வா

ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
முழிக்குது முழிக்குது
காலையில் காலையில்
அது தூங்குது தூங்குது
தூங்குது தூங்குது


வெண்ணிலாவோ
பெண்ணிலாவோ
ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ

ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது

வெள்ளி மேகம்
மெத்தை போடுது
வானவில்லும் வண்ண வண்ண
பூவை தூவுது
ஈர வாடை காத்து வீசுது
சூடு கொஞ்சம் ஏறும்போது
ஆற வைக்குது

மின்னல் தேவதை ஆடி வந்தது
மௌன ராகங்கள் பாடி வந்தது
வான மீன்களும் தோழியானது
விடி விளக்குகள் ஏற்றி வைக்குது
காம தேவன் பண்டிகை
காண வேண்டும் கன்னிகை
வாலிபம் ஏங்குது வா

ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
காலையில் காலையில்
அது தூங்குது தூங்குது

வெண்ணிலாவோ
பெண்ணிலாவோ
ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ

ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது