Rendu Kannam

Rendu Kannam Song Lyrics In English

ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ
ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ
தானானான தானானா னானா
தானா தானன தானா தானன தானனனானா
தானா தானன தானா தானன தானனனானா

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்

உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்
உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா

இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே

தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே
தொடாதே தொடாதே

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ

நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

இருவர் : தானானனா தானாதனா தானானானனா
தானானனா தானாதனா தானானானனா