Rettaikili

Rettaikili Song Lyrics In English


ஏவிடியாத பொழுதாச்சு
அடியேவிழி கூட சுமையாச்சு
கண்ணீரு கடலாச்சு
உன் எண்ணம் படகாச்சு
நீ உள்ள மனம் தானே
எப்போதும் சிறையாச்சு

ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள
ஒத்தையில இந்தக்கிளி
சுத்துதம்மா

தனியா இது இருந்தா
மனம் உறங்காது
துணையே உன்னை இழந்தா
இங்கு வாழ்வேது

என் ஆசை ராசா
அன்பென்ன லேசா
என் ஆசை ராசா
இவ அன்பென்ன லேசா

ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள
ஒத்தையில இந்தக்கிளி
சுத்துதம்மா

ஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஒ

காத்தாலே ஆடி வரும்
சிறு ஓலைக் காத்தாடி
கயிறு அறுந்து போனதென்ன
ராசா உன் கையாலே

காத்தாலே ஆடி வரும்
சிறு ஓலைக் காத்தாடி
கயிறு அறுந்து போனதென்ன
ராசா உன் கையாலே

ஏ தேனே ஒன்னால தானே
புண்ணாகித்தான்போனேன்
இப்போது நானே

பூவான நெஞ்சம்
இது வீணாச்சு உன்னால
பூ மாலை வெயிலில
சருகாச்சு தன்னால

என் வீட்டு ரோசா
அன்பென்ன லேசா
என் வீட்டு ரோசா
என் அன்பென்ன லேசா


ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள

கண்ணீரு வந்து வந்து
காவேரி போலாச்சு
கண்ணான பொண் மனசு
கல்லாகிப் போயாச்சு

கண்ணீரு வந்து வந்து
காவேரி போலாச்சு
கண்ணான பொண் மனசு
கல்லாகிப் போயாச்சு

பூங்காத்து இப்ப
என்னப் பாத்து வதைக்கிறது
என்ன என்ன கூத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து

போராடும் நெஞ்சுக்குள்ளே
ஏதேதோ உண்டாச்சு
நீரோடும் கங்கை நதி
ஏன் இப்போ ரெண்டாச்சு

என் ஆசை ராசா
அன்பென்ன லேசா
என் ஆசை ராசா
இவ அன்பென்ன லேசா

ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள
ஒத்தையில இந்தக்கிளி
சுத்துதம்மா

தனியா இது இருந்தா
மனம் உறங்காது
துணையே உன்னை இழந்தா
இங்கு வாழ்வேது

என் ஆசை ராசா
அன்பென்ன லேசா
என் ஆசை ராசா
இவ அன்பென்ன லேசா