Rhythm Of Life |
---|
யாவும் இங்கு என்னை விட்டு
தூரம் தள்ளி போக
காற்றில்லை இசையும் இல்லை
நீ இன்றி நான் சாக
வா வா வா அன்பே என்னை காப்பற்றிடு
நியாயம் இல்லை என்னை நீ கை விட்டது
போகாதே பெண்ணே மனம் போராடுது
நீ இல்லா இந்த வாழ்க்கை போதாதது
அந்த நிமிடங்கள் நினைத்தாலும் கூட
நம் மயங்கிய நாட்கள் கிடைக்காதது
பேனா பேப்பர் தொட்டால் உன் பெயரை எழுதத்தானே
கண்கள் மூடி கொண்டால் நீ மட்டும்தானே பெண்ணே
நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை
நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை
வசனம் :
மதியே
கனவேஏகாதலே
மறுபடியும் முன்னே வந்தாய்
தடுமாறி போனேனே
இருந்தாலும் பரவாயில்லை
உன் முன்னே சிரிப்பேனே
நா நா நாஹ் என்ன வார்த்தைகள் சொல்லிட
சந்தோசத்தோடு உனையும் நான் பார்த்திட
இந்நாளும் இனிதாக செல்கின்றது
பொல்லாத வாழ்க்கைகூட பொய் ஆனது
நேரம் நகரவே அருகில் இல்லையே
ஓடும் நொடிகளும் வருடங்களாய் மாறுதே
முதலே காதலிப்பேன்
காலத்தின் பின்னே சென்று
மறு பிறவி எடுப்பேனே
வருவாய் என்று
நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை
நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை
மதியேமதியேஏ
கனவேகனவேகனவேஏஏ
வசனம் :
மலர்ந்த காதலும் மறையவில்லையே
நினைவு என்றும் தொலையவில்லையே
நீயும் நானும் என்றும் சிரித்து வாழ
சிறகை போலவே பிரிய வேண்டுமே
மீன்கள் கரை மீது நீந்தி வாழாது
அதை போல் நம் காதல் என்றைக்கும் சேராது
உனக்கு உண்டான வழியைய் வழி ஆக்கு
அந்த வலி தந்த வழியில் நீ செல்லடா
நீ செல்லடாஹ்ம்ம் செல்லடாநீ செள்ளட்டா
நீ ராமன் இல்லை இல்லை
நான் கண்ணகி இல்லை இல்லை
என் சொல்லில் காரணம் உண்டு
இவ்வுலகில் காதலும் உண்டு
நீ ராமன் இல்லை இல்லை
நான் கண்ணகி இல்லை இல்லை
என் சொல்லில் காரணம் உண்டு
இவ்வுலகில் காதலும் உண்டு
நான் ராமன் இல்லை இல்லை
நீ கண்ணகி இல்லை இல்லை
நீ சொல்லும் காரணம் கேட்டால்
இவ்வுலகில் காதலும் இல்லை