Sathiyam Idhu Sathiyam

Sathiyam Idhu Sathiyam Song Lyrics In English


சத்தியம் இது சத்தியம்
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை

சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்

பத்துத் திங்கள் சிறையில் இருந்தேன்
பள்ளிக்கூட அறையில் இருந்தேன்

பத்துத் திங்கள் சிறையில் இருந்தேன்
பள்ளிக்கூட அறையில் இருந்தேன்
எத்தனையோ சிறைகளை
நான் பார்த்து விட்டேன் போடா போ போடா போ

சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்

தலைக்கு மேலே வெள்ளம் போனால்
ஜாண் என்ன முழம் என்ன
தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
நாள் என்ன பொழுதென்ன


தலைக்கு மேலே வெள்ளம் போனால்
ஜாண் என்ன முழம் என்ன
தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
நாள் என்ன பொழுதென்ன
விலைக்கு மேலே விலை வைத்தாலும்
மனிதன் விலை என்ன
உயிர் விட்டு விட்டால் உடல் சுட்டு விட்டால்
அதில் அடுத்த கதை என்ன என்ன
அதில் அடுத்த கதை என்ன

எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்

பஞ்சைப் போட்டு நெருப்பை மறைபப்வன்
பைத்தியக்காரனடா
பாவம் தீர்க்க பணத்தை இரைப்பவன்
பச்சை மடையனடா
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன்
நிச்சயம் மிருகமடா
நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும்
தினம் வாழ்பவன் தெய்வமடா ஆ
தினம் வாழ்பவன் தெய்வமடா

எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
சத்தியம் இது சத்தியம்