Satti Melatha

Satti Melatha Song Lyrics In English


பறக்க உடுடா
பாதி கம்பத்துல கொடிய
கொளுத்தி போடுடா
ஆயிரம் வாலா வெடிய
தியாகி பிச்சை பெருமாள் அண்ணனோட
அரசியல் வாழ்கை முடிய
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிச்சி
ஒட்டுங்கடா
நம்ம ஊருக்கெல்லாம் தெரிய

சட்டி மோளத்த நீ காய்சுடா
நம்ம ஒத்த அடிய வாசிடா
நின்னு போச்சு அண்ணன் மூச்சுடா
ஊரு புல்லா இவரு பேச்சுடா
ஊரு புல்லா இவரு பேச்சுடா

அட ஆலமரம் சாஞ்சிச்சு
நம்ம பெரிய தல மாண்டுச்சு
ரொம்ப அமர்க்களமா வாழ்ந்துச்சு
இப்போ ஊர விட்டு போயிருச்சு
இப்போ ஊர விட்டு போயிருச்சு

ஒன்றியம் தூங்கிருச்சு
ஒண்டியா மண்ணுக்கு போயிருச்சு
வட்டம் வளர்ந்திருச்சு
அதுக்கு மாவட்டம் கோச்சிக்கிச்சு

ஏழுக்கு ரெண்டு கட்டுல போட்டு
அண்ணன கலத்துடா
நம்ம இமவிக கட்சி கொடிய
மேல போர்த்துடா

இந்த முல்லை நகர் ஊருக்குள்ள
அண்ணன போல யாரு
இவர் அழகு முகத்த பாரு
பேரை கேட்டா வணங்கும் ஊரு

கொடிய புடிச்சிக்குன்னு
வந்து நிக்கும் கும்பலை பாருடா
ஏழை ஜனங்க மத்தியில
அண்ணனுக்கு நல்ல பேருடா


அண்ணனை பத்தி
இன்னமும் சொல்றேன்
காச போடுங்கடா
இந்த பாடி யாருக்கு
சொந்தமின்னு தான்
டாஸ போடுங்கடா

எங்க தபக கட்சியில
அண்ணன் தாண்டா சிங்கம்
இது ஹால் மார்க்கு தங்கம்
நீ பண்ணாதடா பங்கம்

கொக்க லங்கா குருவி லங்கா
லங்கா சோப்புடா
வெள்ளை சொக்கா போட்ட பிச்சை பெருமாள்
அண்ணன் சோக்கு டா

அண்ணன தூக்கினு போகணும் டா
சுடுகாட்டுக்கு
அதுக்குள்ள முப்பது ரூவா கொடிய
போத்துறான் முன்னூறு ஓட்டுக்கு

அண்ணன தூக்கினு போகணும் டா
சுடுகாட்டுக்கு
அதுக்குள்ள முப்பது ரூவா கொடிய
போத்துறான் முன்னூறு ஓட்டுக்கு