Seera Seera

Seera Seera Song Lyrics In English


கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி

செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்து தங்குமடி

சீரா சீரா மாமன் சீரா சேரும் மாடு உன்ன நம்பி வாழ வந்தா

தேரா தேரா ஊஞ்சல் தேரா நீயும் ஆட பொட்ட புள்ள ஆள வந்தா

சொத்து சொகம் நீயாக சொந்த பந்தம் நூறாக சித்தம் அது உன் மூஞ்ச பாக்க பாக்க ஏலேலோ

கட்டான் தற காத்தோட கும்மாளம் தான் நீ போட சத்தம் போடும் உன் மடிய கேக்க கேக்க தாலேலோ

கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி

செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்து தங்குமடி

காயாதே காடே காஞ்சாலும் கள்ள காடன் காய மாட்டானே

நாடாண்ட ராசன் சாஞ்சாலும் நெட்ட வாலன் வாழ்வ காப்பானே

வெள்ளி நெற காங்கேயன் வீட்டுக்குள்ள வாறாக ஆரத்தியும் எடுத்திடடி


பொன்னான தாய்பாசம் கைமாறி போகையிலும் தாயாக உன் மாடு செல்லமும் கொஞ்சுமடி

துள்ளிவரும் சேயாக கையில் நீ ஏந்த நெனச்சதெல்லாம் பலிக்குமடி

ஏய் வெள்ளையா

காமி காமி எது காவல் காமி காள மாட கர ஏத்தும் சாமி

ஓடி ஓடி உழைச்சோமே ஓடி மாடில்லாட்டி சுழலாதே பூமி

நெதம் வணங்கும் பரமசிவன் வெளியில வருவதில்ல குலம் விளங்க வருமிதுபோல் உலகில கடவுள் இல்ல

தடி எடுத்து அத அடிச்சா வலிக்குது மனசுக்குள்ள வரம் பலவே அது கொடுக்க வணங்கிடு கவலையில்ல

கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி

செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்து தங்குமடி