Senthamizh Naadenum

Senthamizh Naadenum Song Lyrics In English


பெண் செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

பெண் செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

பெண் செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு

பெண் கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு

நல்ல பல் விதமான சாத்திரத்தின்
மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

பெண் நல்ல பல் விதமான சாத்திரத்தின்
மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே

பெண் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

ஆண் வண்மையிலே உள்ள திண்மையிலே

பெண் மனத் தன்மையிலே அதின் உண்மையிலே

ஆண் உண்மையிலே தவறாத குறவர்

உணர்வினிலே உயர் நாடு


இன்னல் வந்துற்றிடும் போதர்க்கஞ்சோம்
ஏழையர் ஆகியே இம்மண்ணில் துஞ்சோம்

தன்னலம் பேணும் இழித் தொழில் இல்லை
தாய்த் திருநாட்டுக்கு ஈடெங்கும் இல்லை

பெண் செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே

ஆண் ஆயுதம் செய்வோம்
நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம்
கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்
தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம்
பல வன்மைகள் செய்வோம்

தெற்கில் இருந்தே வந்தவனே

பெண் ஆஆ

இந்த தேசத்திற்கே தன்னைத் தந்து விட்டான்

பெண் ஆ ஆ

எங்கும் தன்னலம் இல்லாத் தலைவனைப் போல்
இந்நாடு எந்நாளும் கண்டிடுமோ

ஆண் இங்கிவனை யாம் பெறவே

நாடு என்ன தவம் செய்ததுவோ
என்ன தவம் செய்ததுவோ