Sippiyile Muthu

Sippiyile Muthu Song Lyrics In English

சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்

தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்

ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை

எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை

சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்

ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை

இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை எழுதியவன் எழுதிவிட்டான் எனக்கு என்ன வாதை

சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்

கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை

கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை

அன்னையென்ன அன்னை இதில் தந்தையென்ன தந்தை அன்னையென்ன அன்னை இதில் தந்தையென்ன தந்தை ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணையில்லை

சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்

ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை அது கொடிக்குச் சொந்தமில்லை