Sirikka Chonnaar Sirithen |
|---|
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
இதயம் காட்டும்
கண்ணாடி வதனமில்லையா
இரு விழிகள் படைத்திருந்தும்
புரியவில்லையா
இதயம் காட்டும்
கண்ணாடி வதனமில்லையா
இரு விழிகள் படைத்திருந்தும்
புரியவில்லையா
சிதறி வரும் வார்த்தைகளில்
தெரியவில்லையா
சிதறி வரும் வார்த்தைகளில்
தெரியவில்லையா
சிந்தனையில் தெளிவுடையோர்
யாருமில்லையா
ஆடை என்று கேட்டவுடன்
தந்தவர்தானே
அணிமணியாய் வகைவகையாய்
செய்தவர்தானே
ஆடை என்று கேட்டவுடன்
தந்தவர்தானே
அணிமணியாய் வகைவகையாய்
செய்தவர்தானே
அழகு மகள் இளமை கண்டு
மகிழ்ந்தவர்தானே
ஆசைக் கொண்டு சேர்த்து வைக்க
மறந்ததும் ஏனோ
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
