Sogam Eni Ellai |
|---|
சோகம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
துாரம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
தகு தகு தகு தக தக ஹேய்
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
சோகம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
துாரம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
உறவுகள் வேண்டாம்
உலகம் எங்கும் போகலாம்
இரவுகள் வேண்டாம்
புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால்
விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரம் இருந்தால்
நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆர்ப்பரிக்கும் பறவைகளாய்
அனுதினம் உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்
புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா
வாழ்வோமே இதிலே பத்தியமா
சோகம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
துாரம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
உலகினை விற்று
நிலவு லோகம் வாங்கலாம்
நிலவினை விற்று
புதிய வானம் வாங்கலாம்
ஹஹஹா
கவலையை விற்று கவிதை
நுால்கள் வாங்கலாம்
கவிதையை விற்று
கனவு கொஞ்சம் வாங்கலாம்
மூச்சிருக்கும் வயது வரை
20 வயதினில் இருந்திடலாம்
ஹ காத்திருக்கும் எமன் முதுகில்
கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு
வாழ்வோமே இதுவே உத்தரவு
சோகம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
துாரம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
தகு தகு தகு தக தக ஹேய்
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
சோகம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
துாரம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
