Sogam Thana Ragam

Sogam Thana Ragam Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

சோகம் தானா ராகம்
இந்த கோலம் தானா தாளம்
சோகம் தானா ராகம்
இந்த கோலம் தானா தாளம்
இசை வண்ணம் இல்லை
ஒரு எண்ணம் இல்லை
ஆட விட்டது யாரடி பாட நடம் ஆட
இங்கே ராக தேவதை வாட
அடி நான்தான் சிறைப்பறவை
விழும் கண்ணீர் எந்தன் கவிதை

மானும் நானும் ஒன்று
குல மானம் நாணம் உண்டு
மானும் நானும் ஒன்று
குல மானம் நாணம் உண்டு
கலை மன்றம் செல்லும் தென்றல்
இங்கு ஆட வந்ததும் ஏனோ

சுடு நீர் ஓடையில் ஸ்ருதி
பாடும் மீனினம் நானோ
சலங்கை மணிகளே
விலங்காக பூட்டியதாரோ
இது ஏன் ஏன் இளம் மயிலே
விடை எங்கே வண்ண மயிலே
இது ஏன் ஏன் இளம் மயிலே
விடை எங்கே வண்ண மயிலே


தேவன் கோயில் தீபம் இதை
நீதான் அணைத்தால் பாவம்
தேவன் கோயில் தீபம் இதை
நீதான் அணைத்தால் பாவம்
விரல் பட்டால் கைகள் சுட்டால்
உந்தன் பார்வை திறந்திட கூடும்

கரை மேல் ஆடும் ஓர்
மணம் வீசும் தாமரை ஏடு
மனம் போல் பாடமோ
மழை நாளில் பூங்குயில் பேடு
இது ஏன் ஏன் இளம் மயிலே
விடை எங்கே வண்ண மயிலே
இது ஏன் ஏன் இளம் மயிலே
விடை எங்கே வண்ண மயிலே

சோகம் தானா ராகம்
இந்த கோலம் தானா தாளம்
இசை வண்ணம் இல்லை
ஒரு எண்ணம் இல்லை
ஆட விட்டது யாரடி பாட நடம் ஆட
இங்கே ராக தேவதை வாட
அடி நான்தான் சிறைப்பறவை
விழும் கண்ணீர் எந்தன் கவிதை