Solladhae Yaarukkum Solladhae

Solladhae Yaarukkum Solladhae Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்

சொல்லாதே ஹாங் சொல்லாதே யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

சொல்லாதே யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ரகசிய உறவு அதிசய கனவு ரகசிய உறவு அதிசய கனவு இரவுகள் தோறும் இளமையின் ராகம் விடியும் வரையில் படிப்போம்

சொல்லாதே ஹாஹ் யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

வானவில் ஒன்று மெதுவாக பூமியில் வந்து பெண் மயில் என்று கண்களில் நின்று பேசுவதென்ன விந்தை இளங்காதல் மாது உனைக் காணும்போது ஒரு வார்த்தையேது விழிதானே தூது

இது நயன கவிதை கண்ணே அதில் பயிலும் கதைகள் என்ன

சொல்லாதே யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ரகசிய உறவு அதிசய கனவு இரவுகள் தோறும் இளமையின் ராகம் விடியும் வரையில் படிப்போம்


ஹேய் சொல்லாதே ஹாஹ் யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ஆழ்கடல் ஓரம் அலைபாயும் மோகனராகம் காதலர் ஒன்று சேர்ந்தது கண்டு பாடுது தென்றல் காத்து மணல் மீது நானும் மடி மீது நீயும் தனியாக நானும் கதை பேச வேண்டும் அதில் உலகை மறக்க வேண்டும் ஒரு நினைவில் மிதக்க வேண்டும்

ஹேய் சொல்லாதே ஹாஹ் யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே

ஆறடி கூந்தல் அழகாக ஆடுது ஊஞ்சல் பூச்சரம் சூடி காற்றினில் ஆடி போகுது மேலும் கீழும் அனல் பட்ட தேகம் விரல் பட்ட நேரம் புனல் என்று மாறும் இது என்ன மாயம்

சுக மழையில் நனைய வேண்டும் இரு உயிர்கள் இணைய வேண்டும்

சொல்லாதே ஹாஹ் யாருக்கும் சொல்லாதே நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே ரகசிய உறவு அதிசய கனவு இருவர் : இரவுகள் தோறும் இளமையின் ராகம் விடியும் வரையில் படிப்போம்