Sottu Sottai

Sottu Sottai Song Lyrics In English


சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய்
மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய்
ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலாஓ வாவ்
ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா

ஹே வானத்தின் தீபாவளிகள்
பார்த்தேன் பார்த்தேனே
நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே

நதிகளின் கதகளி
மரகத வயல்வெளி
பார்த்தேன் இன்றுபார்த்தேன் இன்று
அலைகளை காயமாய்
முறுக்கிடும் கடலிடம்
கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று

பூவில் நேற்று தாழ்பாள் போட்டு
தூங்கும் தேனே திருடிடவா
வாயை வாயை மூடி திறந்தேன்
பேசும் மீனே பதில் தரவா
தையாரே தையாரே தையா தையா தையாரே
மயில் தொகை மயில் தொகை
பட்டு சேலை முந்தானைமுந்தானை

சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்


பௌர்ணமி பாயிலே
படுத்திடும் ஆசையில்
தூக்கம் என்றேன் தூக்கம் என்றேன்
வானவில் பாலாமா தரைவரி நீளுமா
ஏக்கம் கொண்டேன் ஏக்கம் கொண்டேன்

விண்மீன் கிண்ணம் பொங்கும் வண்ணம்
வாழ்வில் வழியும் வெண்ணிலவே
காலை நேரம் காற்றில் ஈரம்
சோம்பல் முறிக்கும் சூரியனே
ஓ தையாரே தையாரே தையா தையா தையாரே
தீராது தீராது இன்பம் எல்லாம் கண்டேனே
இயற்கையிலே

சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய்
மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய்

ஓ வானத்தின் தீபாவளிகள்
பார்த்தேன் பார்த்தேனே
நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே