Sreeraman Sreedevi

Sreeraman Sreedevi Song Lyrics In English


ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஆஹா ஹா ஆலய ஓவியமே

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஆஹா ஹா ஆலய ஓவியமே

தங்க நகை சரம் தொடுத்து தங்கை நகை முகம் ரசித்து மங்கை இவள் நலம் பாடுவேன் தங்க நகை சரம் தொடுத்து தங்கை நகை முகம் ரசித்து மங்கை இவள் நலம் பாடுவேன்

இந்திரனின் தேர் எடுத்து சந்திரனை சீர் கொடுக்க சுந்தரனை நான் தேடுவேன் ஓஓசுந்தரனை நான் தேடுவேன்

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஓஹ் ஹோ ஆலய ஓவியமே

ரம்பைகளை சபைக்கழைத்து கண்ணகியை கண்டெடுத்து அண்ணி என்று பேர் சூட்டுவேன் ரம்பைகளை சபைக்கழைத்து கண்ணகியை கண்டெடுத்து அண்ணி என்று பேர் சூட்டுவேன்


பிஞ்சு மகள் சங்கீதம் பஞ்சணையில் கேளாமல் நெஞ்சினிலே தாலாட்டுவேன் ஓஓநெஞ்சினிலே தாலாட்டுவேன்

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஓஹ் ஹோ ஆலய ஓவியமே

பொன் உடலில் மேடையிட்டு மின்னிடையில் கோலமிட்டு மன்மதனின் பூச்சூட்டுவேன் பொன் உடலில் மேடையிட்டு மின்னிடையில் கோலமிட்டு மன்மதனின் பூச்சூட்டுவேன் ஆஹ் ஆ

மன்னவனின் கரம் பிடித்து என் மடியில் இடம் கொடுத்து கன்னி இதழ் சாறூட்டுவேன் ஓஓகன்னி இதழ் சாறூட்டுவேன்

இருவர் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஓஹ் ஹோ ஆலய ஓவியமேஏஏ