Suttum Vizhi Sudare |
---|
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரஹமான்
சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ
உனது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே
உனது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை
உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார்
கன்னத்து முத்தமொன்று