Thaalaattum Kaatre Duet

Thaalaattum Kaatre Duet Song Lyrics In English


லலலா லலலா லாலலலா
ஹோ ஓ ஓஒ
தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே

தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே
குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே
நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே

வானவில்
வண்ணத்தை கொஞ்சம் குழைத்து
உன் ஓவியத்தில் நீ என்னை வைத்தாய்

நெஞ்சிலே
கொஞ்சிடும் அன்பை எடுத்து
உன் சங்கீதத்தில்
நீ என்னை வைத்தாய்

என் கண்களில்
ஒரு தீபம் வைத்தாய்

விண் மீன்களை
என் பக்கம் வைத்தாய்

நீ சொல்லும் வார்த்தை
நீங்காத வேதம்
வேதங்கள் பாடும் தேவனே

தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே


பூமிக்குள்
வேர் போலே இந்தச் சொந்தங்கள்
நீ விட்டுப் போனால்
உயிர் பட்டுப் போகும்

பூவுக்குள்
வாசத்தைப் போல நேசங்கள்
உன் நேசம் போனால்
என் சுவாசம் போகும்

அன்பு என்னும் நம் ராஜ்ஜியத்தில்
ஆள வந்த என் செல்ல ராணி

பாசத்தின் செல்வம் குறையாது இங்கே
அன்பில் நாம் ஏழை இல்லையே

தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே
என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே

குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே
நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே

தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே

தாலாட்டும் காற்றே
தாய் சொன்ன பாட்டே

லலலாலா லலலாலா
ஹோ ஓஒ ஓஒ ஓஓஒ