Thaalelo Raja

Thaalelo Raja Song Lyrics In English


தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா

தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா

ஓஓஓஓ உன் தந்தைதானே உனைத் தேடி வருவார் பொருளெல்லாம் தருவார் பொன் தொட்டில் மேலே துயில் கொள்ள விடுவார் வாழ்வின்பம் யாவும் பெறுவாயே இனிதே

துயர் சூழும் என் வாழ்வின் இருள் நீங்கவே வெண்ணிலா போலே நீ வா வா தாலேலோ ராஜா


தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா

எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே உனதாசை மாமா போல் ஓயாது கல்வி கற்று வாடா நீ புகழ் பெற்று கனியூறும் தேனே என் கலி தீரவே என்றுமே அன்பே நீ வா வா தாலேலோ ராஜா

தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா