Thalaimurai |
|---|
தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
போர் இன்றி நாம் ஒன்றாய்
சேரும் நாள் வாராதா
விடுதலை வழி காட்டுமா
விளகேற்றுமா
சிறு மனித சாதியில்
மேல் என்னும் கீழ் என்னும்
கோலங்கள் மாறாதா
தாய் நிலம் எங்கும்
தாழ்வுகள் இல்லை
மானுடம் எங்கும்
பிரிவினையின் பெரு வலி தாங்கும்
தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
கிரீடங்கள் தோற்கும்
அதிகாரம் வழிகளை கூட்டும்
படகினில் ஏற்றும்
உறவினை மாற்றும்
அகதிகளாக்கும்
வலி வேர் தாங்கும்
தாயே மறைந்த பின்னால்
தாயகம் இனிதாகுமோ
எழுகிற கோபம் பதில் தேடுமோ
வருங்காலமும் புவி மீட்காதோ
தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
போர் இன்றி நாம் ஒன்றாய்
சேரும் நாள் வாராதா
வண்ணம் பல வேதம்
அதில் அன்பும் பரிதாபம்
கதறிய போதும்
கதவினை மூடும்
எரிகிற வீடும் விறகாய் எஞ்சும்
பாடும் மழலை நெஞ்சம்
ஆயுதங்கள் தாங்குமோ
அணு அணுவாக கருவானது
அழிந்தோடுதே அணுவால் இங்கே
ஓஎல்லைகள் ஏதும் அறியாமலே
புரண்டோடுதே மனிதம்
ஓஓஒ ஓஒ
உடைந்த தீப்பொறி உலகமானது
வரைந்த கோடுகள் கரைகலானது
விழுந்த சாவுகள் விதைகளாகுது
அணைந்த சாம்பலும் அமைதி வேண்டுது
தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
போர் இன்றி நாம் ஒன்றாய்
சேரும் நாள் வாராதா
விடுதலை வழி காட்டுமா
விளகேற்றுமா
சிறு மனித சாதியில்
மேல் என்னும் கீழ் என்னும்
கோலங்கள் மாறாதா
தாய் நிலம் எங்கும்
தாழ்வுகள் இல்லை
மானுடம் எங்கும்
பிரிவினையின் பெரு வலி தாங்கும்
தலைமுறை தலை தூக்குமா
பிழை தீர்க்குமா
ஒரு புனித பூமியில்
ஓ ஓஒ ஓ ஓஒ ஓ ஓஒ ஓ ஓஒ ஓஒ
