Thamizhe Pillai Thamizhe

Thamizhe Pillai Thamizhe Song Lyrics In English

பாடலாசிரியர் : கண்ணதாசன்

தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே

தமிழே பிள்ளைத் தமிழே

கன்னம் தட்டும் கைகள் ஆசை காந்தம் சிந்தும் கண்கள் சலங்கை ஆடும் கால்கள் சலங்கை ஆடும் கால்கள் அவை தமிழைக் காக்கும் நூல்கள்

தமிழே பிள்ளைத் தமிழே

ஒரு வாய் சோறு ஊட்டும் போது குருவாயூர் கண்டேன் ஓடி ஆடி நடக்கும் போது பிருந்தாவனம் கண்டேன்

ஒரு வாய் சோறு ஊட்டும் போது குருவாயூர் கண்டேன் ஓடி ஆடி நடக்கும் போது பிருந்தாவனம் கண்டேன்

உச்சி முகர்ந்து கொஞ்சும் போது யசோதை வடிவானேன் உயிரே நிலவே உன்னிடம் கீதை உபதேசம் கேட்டேன்

தமிழே பிள்ளைத் தமிழே

சொல்லும் மந்திரம் தந்தைகென்றால் சுவாமி மலைக் கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன்

சொல்லும் மந்திரம் தந்தைகென்றால் சுவாமி மலைக் கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன்

கோபம் கொண்டு ஓடும் போது பழனி மலைக் கண்டேன் கோவில் பார்க்க நேரம் இல்லை உன்னைத்தான் கண்டேன்

தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே

தமிழே பிள்ளைத் தமிழே