Thamthananam Thana

Thamthananam Thana Song Lyrics In English


தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
ஆஆஅஹ்ஹஆஅஹ்ஹஆஹ்ஹ ஆஅஹ்ஆஆஅ
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்



சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது

ஆஅஆஅஆஆ
சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது

பெண் மனம் பூவிலும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
இனி கனவுகள் தொடர்ந்திட

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்




சிந்தனை அம்புகள் எய்தது
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ

ஆஅஆஅஆஆ
சிந்தனை அம்புகள் எய்தது
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ

சிந்திய பூமலர் சிந்தி விழ
அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ
அந்தியில் வந்தது சந்திரனோ
சந்திரன் போல் ஒரு இந்திரனோ
முந்தைய நாளினில் எங்களின் முன் பலனோ
துணை சுகம் தர சுவை பெற

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன