Thanga Churangham |
---|
தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே
தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே
உயர் தன்மானம் கொண்ட தொண்டை மண்டலமே
தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே
சிங்க மறவர் கண்ட பொருள் வளமே
எட்டுத் திசையிலும் தந்ததெங்கள்
தமிழ்க் குலமே
சிங்க மறவர் கண்ட பொருள் வளமே
எட்டுத் திசையிலும் தந்ததெங்கள்
தமிழ்க் குலமே
தங்கச் சுரங்கம் எங்கள் தாயகமே
கல்லில் சிலை வடித்து
கண்ணில் உயிர் கொடுத்து
கலையில் நிலைத்த மக்கள் மண்டபமே
கல்லில் சிலை வடித்து
கண்ணில் உயிர் கொடுத்து
கலையில் நிலைத்த மக்கள் மண்டபமே
அந்த மல்லர் பல்லரை வென்று
மாமல்லபுரம் கண்டு
மல்லர் பல்லரை வென்று
மாமல்லபுரம் கண்டு
மதுரையும் கொண்ட தொண்டை மண்டலமே
மதுரையும் கொண்ட தொண்டை மண்டலமே
கொடியும் இடை ஒடியும் என
நடை பயிலும் மாதர்
கொடியும் இடை ஒடியும் என
நடை பயிலும் மாதர்
கொடியில் இது புதுமை என
கவி புனயும் ஆணர்
முடி அரசு அடி பணியும்
மன்னவர்கள் வீடு
முடி அரசு அடி பணியும்
மன்னவர்கள் வீடு
மூன்று தமிழ் நூறு கலை
தோன்ற வரும் நாடு
மூன்று தமிழ் நூறு கலை
தோன்ற வரும் நாடு
முந்தானை காற்றில்
வந்தாலும் போதும்
தந்தோம் என்றாடும் உலகம்
முந்தானை காற்றில்
வந்தாலும் போதும்
தந்தோம் என்றாடும் உலகம்
முன்னாலும் பெண்மை
பின்னாலும் பெண்மை
முன்னாலும் பெண்மை
பின்னாலும் பெண்மை
எந்நாளும் மென்மை நிலவும்
எந்நாளும் மென்மை நிலவும்