Thanneeril Thallaadum

Thanneeril Thallaadum Song Lyrics In English


தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

திசை மாறும் ஓடம் போல
தடுமாறும் வாழ்க்கை இங்கே
போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா
ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா

திசை மாறும் ஓடம் போல
தடுமாறும் வாழ்க்கை இங்கே
போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா
ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா

எப்போதும் தாகம் இங்கே
கண்ணீராலே தீராது
கண்ணீரின் சோகம் நீக்க ஈரமுள்ள நெஞ்சேது
வேடிக்கை தெய்வத்தின் வாடிக்கை தானம்மா
வாடிக்கை தானம்மாவாடிக்கை தானம்மா

தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா

ஆராரோ ஆரி ராரிரோஆராரோ
ஆராரோ ஆரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரிரோஆராரோ
ஆராரோ ஆரி ராரிரோ


நூல் கொண்டு ஆடும் பொம்மை
அது கையில் ஒன்றும் இல்லை
தானாக ஆடாதடி கண்ணம்மா
எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ
சொல்லம்மா

நூல் கொண்டு ஆடும் பொம்மை
அது கையில் ஒன்றும் இல்லை
தானாக ஆடாதடி கண்ணம்மா
எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ
சொல்லம்மா

காப்பாற்றும் தெய்வம் இன்று
கண்ணாமூச்சி ஆடுது
கண்கட்டு வித்தை ஒன்று
நாளும் மேடை ஏறுது

கை நீட்டும் பாசங்கள்
கை கழுவும் மோசங்கள்
கை கழுவும் மோசங்கள்
கை கழுவும் மோசங்கள்

தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா