Thathi Thaavi

Thathi Thaavi Song Lyrics In English


தத்தித் தாவி துள்ளட்டுமா
தொத்தித் தோளில் சாயட்டுமா
திக்கைத் தாண்டி செல்லட்டுமா
எனதுயிரே

கண்ணை போல காக்கட்டுமா
கைகள் கோர்த்து பேசட்டுமா
காலம் யாவும் கொஞ்சட்டுமா
எனதுறவே

தத்தித் தாவி துள்ளட்டுமா
தொத்தித் தோளில் சாயட்டுமா
திக்கைத் தாண்டி செல்லட்டுமா
எனதுயிரே

கண்ணை போல காக்கட்டுமா
கைகள் கோர்த்து பேசட்டுமா
காலம் யாவும் கொஞ்சட்டுமா
எனதுறவே

நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
கையில் சேரும் நாள் வந்தது
எனதருகே
நீ வந்தால் சந்தோஷமே தினமே

உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்
உனதருகே வாழ்ந்திடுவேன்

நடை வண்டி ஓட்டும் வயதில்
நீ எந்தன் கனவில் வருவாய்
விரைவாக வளரத் தானே
நான் ஏங்குவேன்

யாரேனும் உந்தன் மடியில்
எனை ஏற்றி போகும் போது
இடம் வந்தும் இறங்காமல் நான்
அடி வாங்குவேன்

உலகத்தில் உறவுகள் யாவும்
ஏற்றத்தில் ஒன்றாய் கூடும்
இறக்கத்தில் நீ தான் வந்தாய்
என் வாழ்விலே

நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
கையில் சேரும் நாள் வந்தது
எனதருகே
நீ வந்தால் சந்தோஷமே தினமே


உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்
உனதருகேவாழ்ந்திடுவேன்

சில நேரம் யாரும் வந்தால்
சிணுங்காமல் அமர்ந்திட மாட்டாய்
அதனாலே நீயும் கூட
பெண்ணல்லவா

உன் போல யாரும் இல்லை
மிதித்தாலும் ஏற்றம் தருவாய்
அன்பே நீ அன்பில் என்றும்
தாயல்லவா

இருளான வழியில் கூட
வழி காட்டும் நன்பன் போல
ஒளி கூட்டி முன்னே செல்வாய்
என் வாழ்விலே

நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
கையில் சேரும் நாள் வந்தது
கையில் சேரும் நாள் வந்தது
எனதருகே
நீ வந்தால் சந்தோஷமே தினமே

உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்
உனதருகே வாழ்ந்திடுவேன்

நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
கையில் சேரும் நாள் வந்தது

உயிரும் இல்லை ஆனாலுமே
உயிரை போல நீ தாங்கினாய்