Thathi Thathi

Thathi Thathi Song Lyrics In English

தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே தித்தித்திடும் தேனின் ஊற்றே மடியில் ஆட வா

மழலையின் மடியிலே மழலை ஆனேன் ஒளி விடும் சிரிப்பிலே உருகி இந்த உலகை மறந்தேன் பச்சக் கிளி பேசும் பேச்சு அன்னைக்கது ராகம் ஆச்சுஊ

தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா

ராகங்களின் தாய் யாரு பொங்கி வரும் தாலாட்டு காற்றுக்கொரு தாயும் யாரு கண்ணே நீ கூறு தினக்கு திம் தினக்கு திம் திரனன

மழலை என்னும் தேனாற்றில் என்னைக் கொஞ்சம் நீராட்டு பிஞ்சுக் குரல் வீணை கொஞ்சி ராகம் நீ பாடு தினக்கு திம் திம்

பிள்ளை இல்லா வீடு பிள்ளை இல்லா வீடு வீடு அல்ல காடு பெற்ற பெரும் பேரு பிள்ளைகளின் கூட்டு சாமி ஓடும் தெய்வங்கள் ஓடும் கோவில் இதுதானே தனக்கு தனனம்

தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா

துள்ளி வரும் பூக் கூட்டம் வண்ண வண்ண தேரோட்டம் தொட்டில் ஒன்று ஆடும் வீடு பூந்தோட்டமே தினக்கு திம் தினக்கு திம் திரனன

குட்டிக் குட்டி விண் மீன்கள் கொஞ்சிச் சிந்தும் தேன் பூக்கள் அங்கும் இங்கும் ஆட்டம் போடும் மான் கூட்டமே தினக்கு திம் திம்

அன்னை என்னும் வார்த்தைஈ அன்னை என்னும் வார்த்தை பெண்மைக்கொரு யோகம் பிள்ளை என்னும் வார்த்தை அன்னைக்கொரு யோகம் பிள்ளைகள் எனக்கு இல்லை என்றாலும் நான் ஒரு தாய்தானே தனக்கு தனனம்