Thaththithai Thavum

Thaththithai Thavum Song Lyrics In English


தத்தித்தை தாவும் தத்தை நான்
முத்தத்தை தூவும் மெத்தை நான்
சித்தத்தை சேரும் வித்தை நான்
மொத்தத்தில் காதல் தத்தை நான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்
ஹோய்ஹோய்ஹோய் ஹோய் ஹோய்

உள்ளூர கள்ளூறும் கன்னம் இருக்க
இதை உண்டாலும் கண்டாலும் போதை வரும்
செவ்வாயில் தென்பாண்டி முத்து பதிக்க
இந்த பொன் மேனி பூ மேனி கோடி பெறும்

தேக்கோஜி ஏக் ஷராபி தோ குலாபி
தில் திவானா ஹை
ஆவோஜி இஸ் தேரே பாஸ் ஜிஸ்தேரே பாஸ்
இஸ் ஹமாரா ஹை ஆஆஆஆ
ஹை ஹை ஹை ஹை ஆஆஆஅஆ

அம்மாடி ஆசை பொல்லாது
யாரோடும் நேரில் சொல்லாது
சொல்லாமல் ஏக்கம் தீராது
சொன்னாலும் தூக்கம் வாராது
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்

எல்லோரும் என் வாசல் நித்தம் வருக
வந்து உல்லாச வெள்ளத்தில் நீந்திடுக
பொன்னாக பூவாக அள்ளித் தருக
மதுக் கிண்ணத்தை கையோடு ஏந்திடுக


ஏமண்டி பாபுகாரு
கோபுகாரு பாகுண்னரா
சூடண்டி சிண்டி பிள்ள மஞ்சி பிள்ள
ரோஜு ஒச்சாரா

சுப்பண்ணா இல்லி நோடு அல்லி நோடு
பிருந்தாவனம் நோடு
சுப்பண்ணா ஏனு பேக்கு ஏனு இஷ்டா
நங்கினி ஹேலு
ஹாஆஅஆஅஆஅஆஅஹாஆஅஆஅ

தத்தித்தை தாவும் தத்தை நான்
முத்தத்தை தூவும் மெத்தை நான்
சித்தத்தை சேரும் வித்தை நான்
மொத்தத்தில் காதல் தத்தை நான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்