Theenda Theenda

Theenda Theenda Song Lyrics In English


தீண்ட தீண்ட
பார்வை தீண்ட
மலர்ந்தேன் நான் ஒரு
மலர் என மலர்ந்தேன்

பார்த்து பார்த்து
ஆசை தூண்ட
சரிந்தேன் உன் இரு
கைகளில் சரிந்தேன்

யார் தாகமோ
யார் மோகமோ
அழைக்கிறதே
ஏதோ நினைகிறதே
அசைகிறதே
நெஞ்சை தேடுகிறேன்

பெண்கள் : தீண்ட தீண்ட
பார்வை தீண்ட
மலர்ந்தேன் நான் ஒரு
மலர் என மலர்ந்தேன்

பெண்கள் : பார்த்து பார்த்து
ஆசை தூண்ட
சரிந்தேன் உன் இரு
கைகளில் சரிந்தேன்

யாரோ என் விழி அறையில்
இன்று எண்ணம் தோன்றிடுதே
அவனோ என்றேன் மனதில்
ஒரு ஆசை எற்படுதேஏஏ

என்னை அழகிய குடையாய்
அவன் கைகள் ஏந்தியதே
ஆடை அதில் ஒரு தடையாய்
என் நானும் எண்ணிடுதே

கூந்தல் எனும் பூக்காட்டில்
ஓஒ பறித்திட சேர்ந்தேனே
கண்ணில் வந்த மின்சாரம்
கால் பரவிட செய்தானே

இருதயம் அவனுக்கு துடிக்கும்
என் இளமையும் அவனுக்கு பிடிக்கும்
இந்த இருபது வயது
குறும்புகள் எல்லாம்
நெஞ்சோடு அடம் பிடிக்கும்

பெண்கள் : தீண்ட தீண்ட
பார்வை தீண்ட
மலர்ந்தேன் நான் ஒரு
மலர் என மலர்ந்தேன்


பெண்கள் : பார்த்து பார்த்து
ஆசை தூண்ட
சரிந்தேன் உன் இரு
கைகளில் சரிந்தேன்

பெண்மை என் முகம் முழுதும்
துளி வேர்வை போக்கிடவ
தூங்கும் வேளையில் மெதுவாய்
ஒரு போர்வை போத்திட வா

நீரில் நான் கொஞ்சம் நனைந்தால்
உன் இதழால் துவட்டிட வா
ஏதோ ஒரு பயம் இருந்தால்
உன் நிழலில் பதுங்கிடவா

என்னை ஒரு பூ போல
உன் மடியினில் தாலாட்டு
ஈர விழி ஓரங்கள்
உன் உயிரையும் நீ தீட்டு

முதல் முறை
வருகிற ஸ்பரிசம்
இதில் முழுவதும்
இருக்கட்டும் நேசம்
என் கனவுகள்கூட
நறுமணம் வீசும்
அன்பான உன் வாசம்

பெண்கள் : தீண்ட தீண்ட
பார்வை தீண்ட
மலர்ந்தேன் நான் ஒரு
மலர் என மலர்ந்தேன்

பெண்கள் : பார்த்து பார்த்து
ஆசை தூண்ட
சரிந்தேன் உன் இரு
கைகளில் சரிந்தேன்

யார் தாகமோ
யார் மோகமோ
அழைக்கிறதே
அழைக்கிறதே
ஏதோ நினைகிறதே
நினைகிறதே
அசைகிறதே
அசைகிறதே
நெஞ்சை தேடுகிறேன்
நெஞ்சை தேடுகிறேன்