Theera Oru

Theera Oru Song Lyrics In English


தீரா ஒரு ஆனந்தமே
கண் முன்னிலே தெரிகிறதே
உள் நெஞ்சிலே இன்பங்களும்
அடைபட்டு ஏனோ தொலைகிறதே

பிஞ்சொன்று கூட்டில் அடைபடுதே
நஞ்சென்ற வாழ்க்கை நகர்கிறதே
திக்கேதும் தெரியா பறவையப்போல்
பறந்தோட மனமும் துடிக்கிறதே

ஓர் நாளிலே வின் மீன்களாய்
நம் வாழ்க்கை வானில் பூக்குமே

நம் கனவுகளை
யார் திருடுவதோ
நம் விதிவலைகள்
யார் எழுதுவதோ
நாம் இடம்பெயரும்
ஓர் பறவைகளோ

நாம் குடி பெயர
சொந்த கூடும் நமக்கில்லையோ
நாடோடி போலே வாழ்க்கை
நகருதே நகருதே
அன்பென்னும் கூட்டுக்குள்ளே
ஒரு வித சுகம் வருதே
வருதே


நீ பிறந்திடவே
இங்கு வேறிடமில்லையோ
ஏன் நரகம் இதில் வந்து
நீ பிறந்தனையோ

நேர் வழிகளிலே செல்லும்
ஊர் இது இல்லையோ
நான் எனும் உரிமை
இங்குதான் உதித்திடுதே

ஊர் விட்டு வந்தே
வாழத்துடிக்குதே ஓர் இனம்
அது சிலந்தி வலையின் கூட்டில்
விழுந்திங்கு நெளிந்திடுதே நீளும்