Thendral Adikkuthu |
|---|
இசை அமைப்பாளர் : எஸ் ஏ ராஜ்குமார்
ஹேமுப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியா
சூரியன் சந்திரன் இந்திரன் சாட்சியா
பாடுற குயிலு ஆடுற மயிலு ஓடுற ரயிலு
காக்கா குருவி வானம் பூமி சாட்சியா
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப் பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத் தொடவா
ம்ஹூம்
மடியினில் விழவா
ம்ஹூம்
உனக்கென்ன மதனே
அடடா
எனக்கின்று மயக்கம் தயக்கம்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
அந்தி வர பாத்து
பாத்து
மின்மினியும் பூக்கும்
பூக்கும்
ஒம் மொகத்தப் பாத்து
பாத்து
எம் மனசும் பூக்கும்
பூக்கும்
ஒண்ணோடு ஒண்ணா சேர உள்ளம் ஏங்குது
மன்னாதி மன்னன் பேச்சு பொன்னத் தூவுது
தேனிருக்கும் பூமலர சூடிக் கொள்ளணும்
வானிருக்கும் நாள் வரைக்கும் வாழ்ந்திருக்கணும்
உறவுக்கு பிறந்தேன்
ம்ம்ஹ்ம்
கனவுக்குள் மலர்ந்தேன்
ம்ம்ஹ்ம்
நிலவுக்குள் வளர்ந்தேன்
அடடா
நெருக்கத்தில் மயங்க மயங்க
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
கல்யாண மேளம்
மேளம்
காதலுக்கு வேணும்
வேணும்
எப்போது கேட்கும்
கேட்கும்
அத்தி மரம் பூக்கும்
ம்ஹூம்
ஒன் வயசு பொண்ணுங்க
எல்லாம் புள்ளைய பெத்தாச்சு
என் நெனப்பு உங்கிட்ட வச்சேன்
என் கதை என்னாச்சு
சீர் எடுத்து பூ முடிக்க காலம் வந்துரும்
ஊர் முழுக்க பந்தலிட்டு தாலி கட்டணும்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத் தொடவா
ம்ஹூம்
மடியினில் விழவா
ம்ஹூம்
உனக்கென்ன மதனே
அடடா
எனக்கின்று மயக்கம் தயக்கம்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
