Thendral Vandhu Veesaadho |
---|
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
செல்வ மகன் கண்களிலே
நின்று விளையாடாதோ
சிந்து கவி பாடாதோ
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
சேதுபதி பூமியிலே
சிவகங்கை சீமையிலே
சேதுபதி பூமியிலே
சிவகங்கை சீமையிலே
தேவர் மகன் சீர் வளர்த்த
தென் பாண்டி நாட்டினிலே
தேவர் மகன் சீர் வளர்த்த
தென் பாண்டி நாட்டினிலே
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
செல்வ மகன் கண்களிலே
நின்று விளையாடாதோ
சிந்து கவி பாடாதோ
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
வெள்ளியிலே தேர் பூட்டி
மேகம் போல மாடு கட்டி
வெள்ளியிலே தேர் பூட்டி
மேகம் போல மாடு கட்டி
அள்ளி அள்ளி படி அளக்கும்
ஆங்கு நிலம் வாடுவதோ
அள்ளி அள்ளி படி அளக்கும்
ஆங்கு நிலம் வாடுவதோ
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
தவளை எல்லாம் குலவை இடம்
தாமரையாம் பூ மலரும்
குவளை எல்லாம் கவி இசைக்கும்
குல மகள் போல் சிரித்திருக்கும்
வண்டு வந்து கூடும்
வண்ண எழில் யாவும்
அண்டி வரும் போர் புயலில்
அடிந்து பட சம்மதமோ
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
ஆத்தாள் அருகினிலே
அம்மா மடிதனிலே
ஆத்தாள் அருகினிலே
அம்மா மடிதனிலே
காத்திருக்கும் பாலகனும்
தன்மான மங்கையும்
காத்திருக்கும் பாலகனும்
தன்மான மங்கையும்
போர் மேவி புறப்படுவார்
பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார்
போர் மேவி புறப்படுவார்
பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார்
யார் வருவார்
யார் மடிவார்
யார் வருவார்
யார் மடிவார்
யார் அறிவார்
கண்மணியே
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ
செல்வ மகன் கண்களிலே
நின்று விளையாடாதோ
சிந்து கவி பாடாதோ
தென்றல் வந்து வீசாதோ
தெம்பாங்கு பாடாதோ