Thene Senthene

Thene Senthene Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

தேனே செந்தேனே
மானே பொன் மானே
மலரும் பூவே வளரும் காற்றே
மலரும் பூவே வளரும் காற்றே

தேனே செந்தேனே
மானே பொன் மானே

ஆசையில் ஆடினேன்
துணை தேடினேன்
என் வாழ்விலே ஹோய்
ஆனந்தம் பாடினேன் மலர் சூடினேன்
பொன் மாலையில்
ஆயிரம் ஜாடை சிந்தும் பார்வை
ஊடல் நாடகம்
அழகிலே தோன்றும் வண்ணக் கோலம்
காதல் காவியம்
தேவி உன் கோவில் தேடி
தீபம் ஏற்றினேன் பூஜை காணவே

தேனே செந்தேனே
மானே பொன் மானே


வானவில் ஊஞ்சலில்
இளம் ஜோடிகள் பண் பாடுது ஹா
மௌனமே ராகமாய்
சுகம் கோடியே கொண்டாடுது
வாசனை மோகம் தந்த தேகம்
போதை ஊட்டுது
பூச் சரம் போலே வந்த வேகம்
எல்லை மீறுது
ராணி எந்தன் காதல் ராணி
பட்டம் சூட்ட வா என்னை ஆள வா

தேனே செந்தேனே
மானே பொன் மானே
மலரும் பூவே வளரும் காற்றே
மலரும் பூவே வளரும் காற்றே

தேனே செந்தேனே
மானே பொன் மானே