Thennamara Thopukkulle Female

Thennamara Thopukkulle Female Song Lyrics In English

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

மாமா உன் பேரச் சொன்னா
மரிக்கொழுந்து வாசம்
ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம்
மாமா உன் பேரச் சொன்னா
மரிக்கொழுந்து வாசம்
ஆளாகி பூத்திருந்தேன் ஆறேழு மாசம்

புது முகமாக அறிமுகம் ஆனேன்
அறிமுக நாளே உன் அடைக்கலமானேன்
இனி நீ சொல்லும் வார்த்தையில் தான் நான் வாழுவேன்

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே

ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை
காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை
ஆத்தோரம் பூவை கிள்ளி தொடுத்து வெச்சேன் மாலை
காத்தோட உரசுது ஐயா காஞ்சி பட்டு சேலை

உனக்கென நானே அவதரித்தேனே
கனவுகளாலே நெஞ்சை அலங்கரித்தேனே
இனி பூஞ்சோல குயிலபோல நான் பாடுவேன்

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே