Thenpandi Mutharame

Thenpandi Mutharame Song Lyrics In English


தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே
தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமேஏ
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதேஏஏ

சோக்காத்தான் நீ கீறியே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறேஏஏ
சோக்காத்தான் நீ கீறியே அய்யே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறேஏ
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா

முத்துமகள் கன்னத்தில் மோகரச எண்ணத்தில்
பத்து விரல் படாமல் முத்திரைகள் இடாமல்
என் நெஞ்சும் என் கண்ணும் தூங்காது

வந்துக்குன்னா உஷாரு வராங்காட்டி பேஜாரு
டபாய்க்காதே என்னாண்ட குந்திக்கய்யா முன்னாண்ட
கண்ணால என்ன நீ துண்ணாதேயோவ்

உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன் பேச்சே காவியம்தானே தேனே

சோக்காத்தான் நீ கீறியே யோவ்
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறேஏஏ
சோக்காத்தான் நீ கீறியே அய்ய




லவ்வுல நீ கில்லாடி அள்ளிக்கய்யா முன்னாடி
வாராவதி வாத்யாரே வலிச்சுக்கய்யா வுடாதே
டபாய்ச்சா செல்லாது என்னாண்ட ஆமா

சென்னைத் தமிழ் சிங்காரி செண்டு கட்டும் ஒய்யாரி
உந்தன் மொழி கேட்டேனே நானுமின்று கெட்டேனே
இந்நாளே என்னாண்ட சவாலா

கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
சல்பட்டா சரக்குடி நீதான் கண்ணு

சோக்காத்தான் நீ கீறியே
தகஜூனுதா
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறேஏஏ
சோக்காத்தான் நீ கீறியே
ஜணுஜணுத்தா
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறேஏஏ
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா

தென்பாண்டி முத்தாரமே
யோவ்
உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே
தென்பாண்டி முத்தாரமே
ஐயோ
உந்தன் தேகத்தில் செந்தூரமேஏ
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதேஏஏ