Therintho Theriyamalo |
---|
தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குதுஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குதுஏனோ இனிக்குது
சொல்லாமல் அள்ளிக் கொண்டு
விளையாடும் கண்ணுக்குள்ளே
திருடாமல் திருடிக் கொண்டு
தடுமாறும் நெஞ்சுக்குள்ளே
தெரிந்தோ தெரியாமலோ
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா
தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குதுஏனோ இனிக்குது
மழை வரும் போல் காற்று வந்து
மனசுக்குள்ளே வீசுது
குடை பிடித்து காதல் வந்து
ரகசியமாய் பேசுது
நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம்
யார் யாரோடு சொல்லுமோ பூ வாசம்
சிறு நகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு
வளர்கிறது முத்தங்களின் விதைகள்
மழை வருது மழைக்கேத்த
வெயில் வருது புயலும் வருது
இலை விழுது
இலைகளோடு சிறகு ஒன்று மிதந்து வருது
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா
தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குதுஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
இதயத்திலே மாய வலையில்
விரித்தது யார் விழியிலே
வலை இதிலே மாட்டிக் கொண்டு
தவிப்பது யார் உயிரிலே
ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம்
மேகங்களாய் போய் வரும் ஊர்கோலம்
இருவர் : கொழுந்து விடும் நெருப்பினில்
குளிர் காய்ந்து
கனவுகளில் சிவக்குது இரவு
பிழை கூட மறந்து போச்சு
புதுசாக மாறிப் போச்சு
அழகான பொய்கள் எல்லாம்
எழுதாத கவிதை ஆச்சு
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது னனனன னா
தெரிந்தோ தெரியாமலோ
இருவர் : ஏதோ நடக்குதுஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ
ஏதோ நடக்குதுஏனோ இனிக்குது