Therke Pirandha

Therke Pirandha Song Lyrics In English


தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

இங்கு வீசி வரும் தென்றல் காற்றே
எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே
எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும்
அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஊர் ஊராக பயணம் புரிந்தோமே
ஒன்றாகப் பழகிக் கிடந்தோமே
கை கோர்த்து பல நாள் நடந்தோமே ஹோய்

சங்கீத மழையை பொழிந்தோமே
சந்தோஷக் கடலில் மிதந்தோமே
அன்பென்னும் கவிதை புனைந்தோமே ஹா

இடையில் புகுந்து திரையை விரித்தான் யாரடி
இருக்கும் இடத்தை இசையால் விளக்கிக் கூறடி

நாங்கள் கொண்டு வந்த சின்னப் பூவே

நாங்கள் தங்குகின்ற முல்லைத் தீவே

உன்னைக் கண்டு கொள்ள இந்தப் பாட்டு
உந்தன் பொன் முகத்தை இங்கு காட்டு


தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

தெம்மாங்கு படிப்போம் இசை போட்டு
தென்பாண்டிக் குயில்தான் இதைக் கேட்டு
சொல்லாதோ நமக்கோர் எதிர் பாட்டு ஹா

கண்ணீரின் விளக்கம் தெரியாதோ
உண்டான கலக்கம் புரியாதோ
கொண்டாடும் வருத்தம் அறியாதோ

நெடு நாள் உறவு
ஒரு நாள் பிரிவைத் தாங்குமா
விழிதான் இமையை
வழிதான் தவறி நீங்குமா

நாம நித்தம் நித்தம் சொல்லும் பாட்டு
பல நெஞ்சம் அதை அள்ளும் பாட்டு
அடி பெண்ணரசி நீயும் கேட்டு
உந்தன் வண்ண முகம் இங்கு காட்டு

தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

இங்கு வீசி வரும் தென்றல் காற்றே
எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே
எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும்
அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ