Therke Veesum

Therke Veesum Song Lyrics In English


தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு

என்ன வேண்டும் என்னைக் கேள் நீயே

போட வேண்டும் பட்டுப் பூம் பாயே

இன்னும் ஏதோ ஏதோ தேவை
நீ சொல்லு சொல்லு

தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு

அன்பினில் வந்து வாடையும்
ஆசைக் கனல் மூட்டும்
சந்திரன் சூரியன் இன்று
மாறி என்னை வாட்டும்

காதல் நோய் வந்த போது
காற்றை நீ விடு தூது

நீரைத் தாண்டி
நீச்சல் இடாது மீனே

பாயைப் போட்டும்
தூக்கங்கள் ஏது மானே

நாளும் பொழுதும்
நீ தான் நீங்கக் கூடாதே

தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு


கண்ணனின் கூடல்
இந்த ஆலிலையில் சாய
கங்கையின் நீரலை இன்று
ஆதி அந்தம் பாய

கேட்கும் வேய்ங்குழல் ஓசை
கூறும் மன்மதன் பாஷை

கோடை நாளில்
காமன் விழாவா இன்று

கைகள் கோர்த்து நாளும்
உலாவச் சென்று

ராதை கண்ணில் கண்டேன்
காதல் ராஜாங்கம்

தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு

என்ன வேண்டும் என்னைக் கேள் நீயே

போட வேண்டும் பட்டுப் பூம் பாயே

இன்னும் ஏதோ ஏதோ தேவை
நீ சொல்லு சொல்லு

தெற்கே வீசும் தென்றல்
மன்றம் வந்து சொன்ன சேதி என்ன
சொல்லு சொல்லு

கட்டில் பாடம் கற்றுக் கொள்ள
தென்றல் சொல்லிச் சென்றதை
சொல்லு சொல்லு