Thingalukku Enna Indru Thirumanamo

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics In English


திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ
பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ
வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ ஓ ஓ ஓ ஓ

திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ
உம்மை தேடியே வந்தவள் பழங்கதையோ
இங்கிருக்கும் எண்ணம் இன்னும் விளங்கலையோ
இன்று ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ
ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ
திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ ஓ ஓ ஓ ஓ

அந்த திங்களும் உனக்கிட்ட பெயரல்லவோ
நுரைப் பொங்கிடும் அலை உந்தன் குழல் அல்லவோ
நான் தங்கிடும் இடம் உந்தன் மனம் அல்லவோ
எனைத் தனியென பிரிப்பது பிழையல்லவோ

இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ
அது காதினில் தேனென விழவில்லயோ
இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ
அது காதினில் தேனென விழவில்லயோ
அந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ
இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ
இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோஓ ஓ ஓ ஓ

வரும் கோபமும் குங்குமக் கோலமிடும்
கால் போவது போல் சென்று திரும்பிவிடும்
மனம் ஆயிரம் போர் வகை நடத்தி விடும்
இது ஆரம்பம்தான் அந்த நோய் அல்லவோ

இமை விழியை மூடும் வரை திறந்திருக்கும்
அதில் இளமை கொலுவேறி மகிழ்ந்திருக்கும்
இதழ் கனிந்தும் கனியாமல் குவிந்திருக்கும்
இதை காதல் என்பார்கள் சரிதானோ
இதை காதல் என்பார்கள் சரிதானோ ஓ ஓ ஓ ஓ


திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ

பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ

வண்ணப் பூவோடு மாவிலை
தோரணமோ ஓ ஓ ஓ ஓ

இருவர் : திங்களுக்கு என்ன இன்று
திருமணமோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஓ