Thoodhu Sellum Kogilam |
---|
கூகூ
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
காதல் யோகம் வந்ததாலே
கவிதை பாடி தாவுதே
காதல் யோகம் வந்ததாலே
கவிதை பாடி தாவுதே
பெண்கள் : கவிதை பாடி தாவுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
உதய சந்திரிகை
குமுதம் போலவே
உறவுதான் கொண்டாடுதேஏஏ
உதய சந்திரிகை
குமுதம் போலவே
உறவுதான் கொண்டாடுதே
உலவும் தென்றல் அலையில் பிரேமை
ஓடமே மகிழ்ந்தோடுதே
பெண்கள் : ஓடமே மகிழ்ந்தோடுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
மது நிலை மாறாத மலர்மேலே
புது நிலை பெற வேண்டுதேஏஏஏ
ஏஏஏ
மது நிலை மாறாத மலர்மேலே
புது நிலை பெற வேண்டுதே
மனதில் ஏதோ மறைந்து மாறன்
கணையைத் தூவிடத் தூண்டுதே
பெண்கள் : கணையைத் தூவிடத் தூண்டுதே
தூது செல்லும் கோகிலம்
ஒரு செய்தி சொல்லக் கூவுதே
ஒரு செய்தி சொல்லக் கூவுதே