Thooki Erinjittu

Thooki Erinjittu Song Lyrics In English


தூக்கி எறிஞ்சிட்டு
போறா போறா காதலை
உசுர எடுக்கிறா போதும்
இந்த வேதனை

துண்டா நானும்
உடையுறேன் நீயும் சொன்ன
வார்த்தையால் பெண்ணே
உன்ன நெனச்சு தான்
வாழ்கைய எங்கோ
தொலைக்குறேன்

ஹே காதல் எல்லாம்
மாயமா துளி கண்ணீர் மட்டும்
மிஞ்சுமா விதி என்று சொல்லி
மறக்கவா அந்த காதலை
மொத்தமா வெறுக்கவா

உன்னை துன்பத்தில்
தள்ளி ரசித்தவன் இங்கே
இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
அடி அன்பாக நீயும் நன்றாக
வாழ எல்லாமே செய்தேனே

பெண்ணே மோதல்
இல்லா காதல் தான் இந்த
உலகில் எங்கும் இல்லையே
மனம் ஒண்ணா ரெண்டும்
சேர்ந்திட்டா அது போலே
காதல் இல்லையே

அடி சொந்தங்கள்
உன்னை மறக்கலாம் உன்
சோகங்கள் கண்டு சிரிக்கலாம்
ஆனால் உன்னை நான் என்றும்
என் நெஞ்சில் வைப்பேன் என்
அன்பு மாறாதே

உனக்காக நானும்
இருக்கிறேன் மறுக்காதே
என்னை நம்பிடு மனசெல்லாம்
நீயே நிற்கிறாய் உன் இதயம்
கொஞ்சம் தந்திடு

தூக்கி எறிஞ்சிட்டு
போறா போறா காதலை
தனியா நடக்குறேன் கால்கள்
போகும் பாதையில்

எதிர் பார்த்த கண்ணில்
தான் சில நீர் துளி பூக்கிறதே
வலியோடு அன்பே நான்
வீதியில் அலைகிறேன்

விடை இல்லா கேள்வி
போல் என் காதலும் இருக்கிறதே
ஒரு வார்த்தை சொன்னாலும்
என் வாழ்கையும் பிழைதிடுமே

நில்லு சொல்லாமல்
போகாதே என் கண்ணீரும்
தீராதே உன்னை நான்
பார்க்காமல் மனம்
முள்ளாக மாறிடுதே


உன்னை துன்பத்தில்
தள்ளி ரசித்தவன் இங்கே
இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
அடி அன்பாக நீயும் நன்றாக
வாழ எல்லாமே செய்தேனே

அடி சொந்தங்கள்
உன்னை மறக்கலாம் உன்
சோகங்கள் கண்டு சிரிக்கலாம்
ஆனால் உன்னை நான் என்றும்
என் நெஞ்சில் வைப்பேன் என்
அன்பு மாறாதே

ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ

வேண்டாம் காதலே
போதும் போதும் போய் விடு
மீண்டும் ஒரு முறை
வேண்டாம் அந்த வேதனை

ஒரு காதல் காயம்
ஆறும் முன் மறு காதல்
என்னை கேக்குதே எனக்காக
எதையும் செய்யவே அவன்
நெஞ்சம் எல்லாம் துடிக்குதே

நான் ஆசை எல்லாம்
வெறுக்கிறேன் மண வாழ்கை
சிறையில் தவிக்கிறேன் உனக்காக
என்னை மாற்றவே என் மனசில்
இடமும் இல்லையே

உன்னை துன்பத்தில்
தள்ளி ரசித்தவன் இங்கே
இன்பமாய் துள்ளி குதிக்கிறான்
அடி அன்பாக நீயும் நன்றாக
வாழ எல்லாமே செய்தேனே

பெண்ணே மோதல்
இல்லா காதல் தான் இந்த
உலகில் எங்கும் இல்லையே
மனம் ஒண்ணா ரெண்டும்
சேர்ந்திட்டா அது போலே
காதல் இல்லையே

உனக்காக நானும்
இருக்கிறேன் மறுக்காதே
என்னை நம்பிடு மனசெல்லாம்
நீயே நிற்கிறாய் உன் இதயம்
கொஞ்சம் தந்திடு