Thoondaa Mani Vilakku

Thoondaa Mani Vilakku Song Lyrics In English


தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூசி பட்டும் மங்காது
புகை படிஞ்சும் கருக்காது
என் துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்
துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு

லுலுலுலுலுலுலுலு
அந்தி மாரியம்மன் கோயிலிலே
நல்ல கன்னிப் பொண்ணுக கும்மிகளாம்
சின்னச் சிந்து மணிப் பூவெடுத்து
அதப் பின்னிப் பின்னி வெச்ச மாலைகளாம்
மால சூடிக் கொண்ட அம்மனுக்கு
தினம் காலை மாலை நல்ல பூசைகளாம்
பூசையிலே மணி ஓசைகளாம்
அந்த ஓசையும் கும்மிக்குத் தாளங்களாம்
ஓஓ லுலுலுலுலுலுலுலு

முட்டை இடக் கோழி ஒண்ணு
குப்பையிலே மேஞ்சு வரும்
குண்டு மணிச் சேவல் வந்து
கூட்டி வந்த கதை அறியும்
நேத்தறுத்த வயலுக்குள்ளே
நெல் பொறுக்கப் போகையிலே
காத்தடிச்ச வேளையிலே
களஞ்சியத்தக் கண்டெடுத்தேன்
கொல்லையிலே மரிக்கொழுந்து
கொடி படர்ந்த மல்லிகப் பூ
பறிப்பாரு இல்லாம தனியாகப் பூத்ததம்மா
பறிச்சது யாரு வாங்கித் தொடுத்தது யாரு
தலையிலே முடிச்சும் தவிக்குது பாரு
ஆ ஹா ஆ ஆ ஆ ஆ

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு


காட்டு வழி போகும் வண்டி
வண்டியிலே மாடு ரெண்டு
மாடு போறப் பாதை எல்லாம்
ரோடுகளா ஆகிப் போச்சு
ஊருக்கூரு போவதற்கு
ரோடு இப்ப ரொம்ப இருக்கு
மானத்திலும் ரோடு போட்டு
பறந்து போகும் காலம் ஆச்சு
பாட்டன் பூட்டன் கட்டுன வண்டி தானே
இதுக்கு நல்ல மூலம் ஆச்சு டுர்ர் ஏஹே போ

ஒறக்கச் சடவுல
நான் உலுப்பி விட்டேன் கண்ணீர
உலுப்பி விட்ட கண்ணீரு
ஓடுதம்மா ஆறாக
கொல்லி மல மேல குயிலுச் சத்தம் கேக்கயிலே
கொத்த மல்லிப் பூப் பூக்கும்
கொடி முருங்கக் காய் காய்க்கும்
சந்தத் தடத்தருகே
சாதிலிங்க மரத்தடியில்
கன்னி கழியாத கைக் கிளியா நான் இருந்தேன்
அண்ணாந்து பாத்தா ஆகாசம் பூரா
அள்ளாத பூவு யாரும் தள்ளாத பூவு
ஆ ஹா ஆ ஆ ஆ ஆ

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூசி பட்டும் மங்காது
புகை படிஞ்சும் கருக்காது
என் துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்
துக்கம் அத வெளியில் சொன்னா
மங்கி விடும் மங்கி விடும்

தூண்டா மணி விளக்கு
தூண்டாம நின்னெரியும்
தூண்டா மணி விளக்கு